மும்பை நடிகையுடன் சூர்யா நடனம்?

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சில நாட்கள் வரை படத்தின் வசனப்பகுதிகளையும் ஆக்‌ஷன் காட்சிகளையும் படமாக்கிய இயக்குனர் லிங்குசாமி தற்போது படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்.

இந்தப்பாடலில் சூர்யாவுடன் மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஆடுவார் என தெரிகிறது. யுவனின் துள்ளல் இசையில் ரஞ்சித்தின் குரலில் யாராகியுள்ள இந்தப்பாடலுக்கு ராஜுசுந்தரம் வித்தியாசமான முறையில் நடனம் அமைக்கிறார்.

இதற்காக எண்பது லட்ச ரூபய் செலவில், மும்பை மும்பை போரிவாலி பகுதியில் ஒரு மிகப்பெரிய செட் ஒன்று போடப்பட்டு இந்த பாடல்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் படமாக்கப்பட்ட பின்னரும் கூட தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மும்பையில் படப்பிடிப்பு தொடரும் என சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்படியே கோவா செல்ல இருக்கும் இந்த டீம் அங்கே பத்து நாட்கள் முகாம் இடுகிறது.

LinguswamyN Subash Chandra BoseSamanthaSantosh ShivanSuriyaThirupathi BrothersYuvan Shankar Raja
Comments (0)
Add Comment