‘டேக் ஆப்’ மலையாள படத்தை பாராட்டிய சூர்யா..!

நேரம் கிடைக்கும்போதெல்ல்லாம் மற்ற மொழிகளில் வெளியாகும் நல்ல படங்களை தவறாமல் பார்த்துவிடும் பழக்கம் உள்ளவர் சூர்யா.. அந்தப்படம் தனக்கு மனதுக்கு பிடித்தமான படமாக இருந்தால் அதை மனதுவிட்டு பாராட்டவும் செய்வார்.. அப்படி அவர் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் பார்த்ததால் தான் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ’36 வயதினிலே’ படம் கிடைத்ததை மறக்க முடியுமா..?

அப்படித்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் பார்வதி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டேக் ஆப்’ படத்தை பார்த்த சூர்யா, அதன் கதை மற்றும் படமாக்கப்பட்ட விதம் குறித்தும் அதில் நடித்துள்ளவர்களின் நடிப்பு குறித்தும் சிலாகித்து பாராட்டியுள்ளார்.

36 வயதினிலேSuriyaTake Offகுஞ்சாக்கோ போபன்சூர்யாடேக் ஆப்பஹத் பாசில்பார்வதிஹவ் ஓல்டு ஆர் யூ