கடந்தவாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ’36 வயதினிலே’ படத்தை ஜோதிகாவின் கௌரவமான ரீ என்ட்ரிக்காகத்தான் தயாரித்தார் என்றாலும், குறிப்பாக இந்தப்படத்தை தயாரிக்க காரணம் திருமணமான பெண்களின் மன உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தி அவர்களது மாற்றத்திற்கு வழிவகுக்க இந்தப்படம் உதவும் என்பதும் தான்
இப்போது படம் நல்ல வரவேற்புடன் ஓடுவதை பார்த்து சந்தோஷப்படும் சூர்யா இப்படிப்பட்ட கதையை தந்ததற்காக இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசுக்கும், அதில் நடித்த ஜோதிகாவுக்கும், படத்தை பாராட்டி தீர்த்த ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தை பார்ப்பதன் மூலம் இன்னும் பல ‘வசந்தி’கள் தங்களது கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து தன்னம்பிக்கையுடன் நடைபோட ஆரம்பிப்பார்கள் என்றும், அதற்கு தான் ஒரு காரணியாக அமைந்ததற்காகவும் மிகவும் பெருமைப்படுகிறார் சூர்யா.