கேரளாவில் சூர்யாவுக்கென பலமான ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவரது படம் ரிலீசாகும்போதேல்லாம் சுமார் 200 தியேட்டர்களுக்கு குறையாமல் தான் ரிலீஸாகின்றன. அவ்வளவு ஏன், நம்ம ஊர் ரசிகர்களை மிஞ்சு வகையில் இந்தவருடம் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2009ல் அவர் நடிப்பில் வெளியான ‘அயன்’ படத்தை கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரிலீஸ் செய்து கொண்டாடினார்கள்.
அப்படிப்பட்ட சூர்யாவின் ரசிகர்கள் தான் இந்தமுறை புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளார்கள். டிச-16ல் வெளியாக இருக்கும் ‘சி-3’ படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை ஆல் கேரளா சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்பேர் அசோசியேஷன் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஸ்டுடியோகிரீன் நிறுவனமே இந்தப்படத்தை வெளியிடுகிறது.