கமல் பிறந்த நாளில் வெளியாகும் ‘சூர்யா’ பட டீசர்..!

சூர்யா நடித்த படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக மக்கள் மனதில் முதல் இரண்டு இடத்தை சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டுமே பிடித்துக்கொண்டன. அப்படியென்றால் சூர்யா-ஹரி கூட்டணியில் தற்போது உருவாகிவரும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கு எத்தனை எதிர்பார்ப்பு இருக்கும்..?

அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டுவது போலவே இந்த மூன்றாம் பாகமும் விறுவிறுப்பாக உருவாகியுள்ளதாம். இந்தப்படத்தை டிச-16ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசரை கமல் பிறந்தநாளன நவ-7ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.. இந்த டீசரை வெளியிடப்போகும் செய்தியையே ஒரு மோஷன் போஸ்டராக வெளியிட்டு அசத்தியும் உள்ளார்கள்.

KamalS 3Suriyaஎஸ் 3கமல்சிங்கம்சிங்கம்-2சூர்யாஹரி