சமீபத்தில் சென்னை வந்த கிரிக்கெட் வீரர் தோனி, ரஜினிக்கு அடுத்ததாக தனக்கு பிடித்த நடிகர் சூர்யா தான் என்று கூறி சூர்யா ரசிகர்களை பரவசப்படுத்தினார்.. அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாக டானிக் தரும் விதமாக பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் சூர்யாவை ‘தீவிர அர்ப்பணிப்பாளர்’ என பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் ரண்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ கிளிப் ஒன்றில், படம் வரைந்து பாகங்களை குறிப்பது என்று சொல்வார்களே அந்த மாதிரி, சூர்யாவின் ‘சிங்கம்’ பட போட்டோவை கிளிப்பில் மாட்டிவைத்து, அணு அணுவாக சூர்யாவை பாராட்டியுள்ளார் ரண்வீர் சிங்.. மேலும் சூர்யா நடித்த ‘ரக்த சரித்திரா’ படம் தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் ரண்வீர் சிங்.