மலையாள நடிகர் சங்கத்திற்கு சூர்யா 10 லட்சம் நன்கொடை ..!

கடந்த இரண்டு வாரங்களாக கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு தமிழ் திரையுலகில் இருந்து தாராளமாக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர்கள் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து 25 லட்ச ரூபாய் கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, மலையாள நடிகர் சங்கத்திற்கு (AMMA) 10 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் மலையாள நடிகர்சங்கத்தின் 25வைத்து ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சூர்யா அப்போது, மலையாள நடிகர் சங்கத்திற்கு (AMMA) 10 லட்ச ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் விதமாக அன்னான் சூர்யாவின் சார்பாக இன்று திருவனந்தபுரம் சென்ற நடிகர் கார்த்தி 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை மலையாள நடிகர்சங்க தலைவரான மோகன்லாலை சந்தித்து அவரிடம் வழங்கினார்.

AmmaKarthiKeralaSuriyaகார்த்திகேரளாசூர்யா