லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘அஞ்சான்’ படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல், தாடி என அவருடைய கெட்டப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்தப்படம் பற்றி லிங்குசாமி சொல்லும்போது, “இந்தப்படத்தின் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்வதில் முன் எப்போதும் இல்லாத வகையில் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முதல்கட்ட படப்பிடிப்பை மும்பையில் 35 நாட்கள் நடத்திவிட்டு சமீபத்தில்தான் ஓய்வுக்காக சென்னைக்கு திரும்பியிருந்தனர் படக்குழுவினர்.. ஆனால் சூர்யாவோ தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிகள், சமூக விழாக்களில் கலந்துகொண்டார். தற்போது ஓய்வை முடித்துவிட்டு இன்று மீண்டும் மும்பைக்கு பறக்கின்றனர் ‘அஞ்சான்’ படக்குழுவினர். வரும் மார்ச் 5 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவக்க உள்ளனர்.
255824 914876I like this post a great deal. I will undoubtedly be back. Hope that I will be able to read more insightful posts then. Will probably be sharing your information with all of my associates! 154699