முதல்வரை விமர்சித்த நடிகர்..! கருத்துக்கூற மறுத்த தலைவர்..!

நிச்சயமா நம்ம தமிழ்நாட்டில் இப்படி நடக்காதுன்னு உங்களுக்கு தெரியும்.. இது நடந்தது கேரளாவில்.. சில தினங்களுக்கு முன் ஆருண்முலா அணை விவகாரத்தில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி சொன்ன ஒரு கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து சொன்னார் நடிகர் சுரேஷ்கோபி..

அதாவது “எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உண்மையான தகவலை கேட்டுபெற்று அதன் பின் கருத்து தெரிவிக்கவேண்டும்” என தைரியமாக முதல்வரை விமர்சித்தார் சுரேஷ்கோபி. இது கேரள அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இது குறித்து நடிகர்சங்க தலைவராகவும் தற்போது லோக்சபா உறுப்பினராகவும் உள்ள நடிகர் இன்னசென்ட் ஏதாவது கருத்து கூறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ இந்த விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூறி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பாமல் மௌனம் காக்கிறார்..

சுரேஷ்கோபி சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யப்பட்ட வைத்துள்ளது.

Suresh Gopiசுரேஷ்கோபி