சன்னி லியோன் வரவால் ஸ்தம்பித்த கொச்சி..!

பாலிவுட்டின் கவர்ச்சிக்கன்னியான சன்னி லியொன பற்றி அறியாதவர்கள் யாரும் உண்டோ..? தமிழில் வடகறி என்கிற படத்தில் கூட ஒரு பாட்டுக்கு ஆட்டம் ஆடிய இவருக்கு கேரளாவில் ரசிகர்களிடம் எத்தகைய செல்வாக்கு இருந்தது என நேற்று நிரூபணமானது. கொச்சியில் முக்கியமான சாலையான எம்.ஜி.ரோட்டில் அமைந்துள்ள செல்போன் ஷோரூமை திறந்துவைக்க நேற்று வந்திருந்தார் சன்னி லியோன்.

காரில் வந்தார் என்பதை விட, அலைகடலென கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் என்கிற கடல் அலை மீது மிதந்துவந்தார் சன்னி லியோன் என எழுதினால் மிகச்சரியான வாக்கியமாக இருக்கும்.. அந்த அளவுக்கு கேரளா ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை கண்டு திகைத்து போயுள்ளார் சன்னி லியோன்.

Sunny Leoneசன்னி லியோன்