திலீப் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி


சுந்தர்.சி அப்படி எதையும் யோசிக்காமல் சொல்லிவிடுபவர் அல்ல.. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வெள்ளிமூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அவர் சொன்னார் என கூறியிருந்தோமே.. அதுகூட அந்தப்படத்தின் கதை, அதில் வரும் கதாநாயகனின் கேரக்டர் மீது இருக்கும் நம்பிக்கையை வைத்து தான் அவர் அப்படி சொல்லியிருந்தார்.

அதேசமயம் ‘பாண்டிப்படா’ என்கிற மலையாள படத்தை ரீமேக் செய்து இயக்கவிருப்பதாகவும் சொல்லியிருந்தார்.. பத்து வருடங்களுக்கு முன் மலையாத்தில் திலீப், பிரகாஷ்ராஜ், நவ்யா நாயர் நடித்து அப்போதே 12கோடி ரூபாய் வசூலித்த படம் அது.. காமெடிப்படங்களுக்கு கதை எழுதுவதிலும் இயக்குவதிலும் கரைகண்டவரான ரபி மெக்கார்டின் தான் அந்தப்படத்தை இயக்கியிருந்தார். தமிழில் ‘தென்காசிப்பட்டணம்’ என்கிற நான்ஸ்டாப் காமெடிப்படத்தை கொடுத்தவர் இவர்தான்.

இந்த இரண்டு படங்களையும் ரீமேக் செய்யப்போவதாக சுந்தர்.சி உறுதியாக கூறியுள்ளதற்கு காரணம் இருக்கிறது. அந்த இரண்டு படங்களின் ரீமேக் ரைட்ஸும் இப்போது சுந்தர்.சி கையில். இதில் ‘வெள்ளிமூங்கா’ ரீமேக்கில் சுந்தர்.சி நடிப்பதோடு சரி.. அதேபோல ‘பாண்டிப்படா’ படத்தின் ரீமேக்கை இயக்குவது மட்டும் தானாம்..

'வெள்ளிமூங்கா’DilipSundhar Cதிலீப்திலீப் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சிநவ்யா நாயர்பாண்டிப்படாபிரகாஷ்ராஜ்