‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு ‘மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தாலும் அவரோட மார்க்கெட் என்னவோ சூடுபிடிக்கலை. ஆனா வம்சம், நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கு பின்னர் சுனைனாவோட நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது.. ஆனாலும் கடந்த வருடம் ‘வன்மம்’ என்கிற படத்தில் மட்டும் தான் நடித்தார் சுனைனா.
தான் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன் என்று பொதுமக்களுக்கே நேரடியாக விளக்கம் அளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனக்கு சவால் விடும் வகையிலான கேரக்டர்கள் எதுவும் சரியாக அமையாததாலும், ஒரே மாதிரியான கேரக்டர்களே தொடர்ந்து தேடி வருவதாலும் தான் தனக்கு ஒரு இடைவெளி விழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் சுனைனா.