சுமனை மிரட்டிய சௌகார்பேட்டை இயக்குனர்..!

மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘சௌகார்பேட்டை’.. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடித்துள்ள இந்தப்படத்தை விசி.வடிவுடையான் இயக்கியுள்ளார்..ஜான் பீட்டர் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கும் சுமனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்…

விழாவில் அவர் பேசும்போது, இந்தப்படத்தின் கதையை போனிலேயே வடிவுடையான் சொன்னார். கேட்கும்போதே வித்தியாசமாக இருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன். ஆனால் இங்கே வந்ததும் தான் தெரிந்தது சுடுகாட்டில் ஷூட்டிங் வைக்கப்போகிறார் என்று. அதுமட்டுமல்ல, ரோப்பில் வேறு கட்டி தூக்கினார்கள்.. இனி வடிவுடையான் படத்தில் நடிப்பதென்றால் முன்கூட்டியே அக்ரிமென்ட் போட்டுத்தான் நடிக்கவேண்டும் என முடிவுசெய்து விட்டேன்” என கூறினார் சுமன்.

ஆனாலும் ‘சிவாஜி’ படத்துக்கு பிறகு தனக்கு பவர்புல் கேரக்டர் கிடைத்தது என்றால் அது இந்தப்படத்தில் தான் என்றும் மறக்காமல் குறிப்பிட்டார் சுமன்.. இந்த விழாவில் ராய்லட்சுமி தவிர படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

‘சாட்டை‘சௌகார்பேட்டைசிவாஜிசுமன்ஜான் பீட்டர்மைனாராய்லட்சுமிவிசி.வடிவுடையான்ஷாலோம் ஸ்டுடியோஸ்ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்ஸ்ரீகாந்த்