ஏப்-2ல் திரைக்கு வரும் சுல்தான் ; எதிர்பார்ப்பை அதிகரிக்கும் டீசர்


கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘சுல்தான்’.. ரெமோ மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியான 17 மணி நேரத்திலேயே சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இந்த டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.

டீசர் வெளியான நிலையில் படம் பற்றி கார்த்தி கூறும்போது, “குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் ஆக்சன் என கலந்து ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இதை உருவாக்க நேர்மையாக உழைத்திருக்கிறோம். குறிப்பாக சாதாரண மனிதனுக்கும் வலிமையான மனிதனுக்குமான உறவை பற்றி இதில் பேசியிருக்கிறோம்” என கூறியுள்ளார்.

இந்தப்படம் வரும் ஏப்-2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

"Sunny Sunny Yaariyan" Full Songactor vivekBakyaraj KannanDream Warrior PicturesRashmika Mandannasulthansulthan in april 2sulthan release datesulthan teaser