“பொருத்தமான டைட்டிலே 5௦% வெற்றியை தரும்” – லியோவிஷன் ராஜ்குமார்..!!

வித்தியாசமான தலைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான் தயாரிப்பு நிறுவனங்களின் முதல்டார்கெட்டாக இருக்கிறது. அந்தவகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’,  ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா’ என வித்தியாசமான படங்களைத் தயாரித்தது ‘லியோவிஷன்’ பட நிறுவனம்.

இவை ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிபெற்று வசூலையும் வாரிக்குவித்தன. இப்போது இந்த நிறுவனம் ஜே.எஸ்.கே நிறுவனத்துடன் இணைந்து புதுமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. இவர்களது முந்தைய படங்களும் இதைப்போலவே நீண்ட தலைப்பு உடைய படங்கள்தான் என்பதும் அவை மிகப்பெரிய வெற்றிபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒழுக்கத்தில் முன்மாதிரியாக திகழும் ஒரு கிராமமும், அந்த ஒழுக்கம் தங்களக்கு அசௌகரியம் தருகிறது என கருதும்  நாலு போலீசையும் பற்றிய கதை தான் ‘நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும்’. இந்தப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

அருள்நிதிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஎன்.ஜே.ஸ்ரீகிருஷ்ணாநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்நாலு போலீஸும்நல்லா இருந்த ஊரும்ரம்யா நம்பீசன்லியோவிஷன்