மிர்ச்சி ரீமேக்கில் நடிக்கிறார் ‘நான் ஈ’ சுதீப்

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ‘மிர்ச்சி’. ஆந்திர சினிமாவின் ‘ரிபெல்ஸ்டார்’ பிரபாஷ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்த இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

நான் ஈ புகழ் சுதீப் இந்தப்படத்தின் உரிமையை வாங்கி பிரபாஸ் கேரக்டரில் நடிப்பதோடு அவரே படத்தை இயக்குகிறார். ஏற்கனவே ஐந்து படங்களை இயக்கியுள்ள சுதீப், தமிழில் வெற்றிபெற்ற சிங்கம் படத்தை கெம்பே கவுடா என்கிற பெயரில் கன்னடத்தில் இயக்கி நடித்திருந்தார். அந்தப்படம் கன்னடத்தில் சூப்பர்ஹிட்டானது.

அதேபோல தற்போது மிர்ச்சி படத்தின் ரீமேக்கையும் சூப்பர் ஹிட்டாக்க வேண்டும் என களம் இறங்கியுள்ள சுதீப், இன்னும் படத்திற்கு பெயர் எதுவும் வைக்காமலே படத்தை ஆரம்பிக்கவுள்ளார். இப்போது முதல் கட்டமாக ‘குத்து’ ரம்யாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் சுதீப்.

சுதீப்
Comments (784)
Add Comment