மீண்டும் ஜி.வி.பிரகாஷ் படத்தை கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..!

கடந்த ஜனவரி மாதம் ஜி.வி.பிரகாஷுக்கு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. முதன்முதலில் அவர் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படம் வெளியானதும், ரசிகர்களின் ஆதரவுடன் அது ஹிட்டானதும் முதல் நல்ல விஷயம். இன்னொரு விஷயம் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்துக்காக ஜனவரியில் தான் பூஜை போடப்பட்டது..

இதோ இப்போது முழுப்படமும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜி.விக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, முக்கிய வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே ஜி.வி.யின் முதல் படமான ‘டார்லிங்’கை வெளியிட்டு அவருக்கு வெற்றி தேடித்தந்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் இப்போது ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. விரைவில் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

ஆனந்திஜி.வி.பிரகாஷ்டார்லிங்த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா