கடந்த வருடம் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த பாடல் என்றால் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலாகத்தான் இருக்கும்.. இப்போது ஜிமிக்கி கம்மலை தொடர்ந்து வினீத் சீனிவாசன்-ஷான் ரகுமானின் அடுத்த அதிரடியாக ‘மாணிக்ய மலரே’ என்கிற பாடல் வெளியாகியுள்ளது.
‘ஒரு ஆதார் லவ்’ என்கிற படத்தில் இடம்பெறும் இந்தப்பாடல் வெளியான இரண்டு நாட்களிலேயே சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
எப்படி ஜிமிக்கி கம்மல் பாடல் வைரலானதற்கு தனது நடனத்தால் அந்தப்பாடலை பிரபலப்படுத்தி, தானும் பிரபலமான ஷெரில் காரணமோ, அதேபோல இந்தப்பாடல் பிரபலமாக ஒரே காரணம் இந்தப்படத்தில் நடித்துள்ள பிரியா பிரகாஷ் வாரியர் தான்.
பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவில் இடம்பெறுவதாக படமாக்கப்பட்டு இருக்கும் இந்த பாடலில் நாயகி பிரியா பிரகாஷ் வாரியரின் க்யூட்டான முக பாவனைகள் தான் அதிக அளவில் இந்த பாடலை பார்வையாளர்களை பார்க்க தூண்டியுள்ளது.. இதை பார்வையாளர்களின் தொடர்ச்சியான கமெண்ட்டுகளில் இருந்தும் உணர முடிகிறது