நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாகும் ‘கலாசல்’..!

எண்பதுகளில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடியாக நடித்து கொடிகட்டி பறந்தவர் பிரபல நடிகை அம்பிகா. தற்போது அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ‘கலாசல்’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது., “மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம் மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.

நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்ப்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார் இயக்குனர்.

அபிஷேக்அம்பிகாஅஸ்வின் மாதவன்கமல்கலாசல்சாய்பிரியாசுந்தர்.Cஜோவிதாபத்ரிபானுசந்தர்மதன்பாப்முருகதாஸ்ரஜினிராதாரவிராம்கேசவ்லிவிங்ஸ்டன்