‘மெட்ரோ’ சிரிஷ் பட டைட்டிலை வெளியிடும் கௌதம் மேனன்..!

செயின் திருடர்களை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன் வெளியான ‘மெட்ரோ’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சிரிஷ்.. இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை தரணீதரன் இயக்கவுள்ளார்.. ஆம். பர்மா’ படத்தை இயக்கியவரே தான். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்..

இந்தப்படத்தின் டைட்டிலை வரும் டிச-29ஆம் தேதி இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட இருக்கிறார்.. கொலை மற்றும் அதன் மர்மம் அடங்கிய பின்னணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜன-2 முதல் ஆரம்பிக்க இருக்கிறது.

Gautham MenonSrishகௌதம் மேனன்