அட என ஆச்சர்யபடுத்தி, அமர்க்களப்படுத்தி விட்டார் ஸ்ரீகாந்த்.. இருக்காதா பின்னே..? சொந்தமாக தனது மனைவி வந்தனாவின் பெயரில் ‘கோல்டன் ப்ரைடே’ என்கிற கம்பெனியை துவங்கி ‘நம்பியார்’ என்கிற படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறார். நேற்று மாலை இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடிவிட்டார்.
குறிப்பாக நேற்று அவரது மனைவி வந்தனாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவே இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று நடத்தியுள்ளார் ஸ்ரீகாந்த். விழாவிற்கு வருகை தந்த அத்தனை பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதில் வந்தனா ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி..!