நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன். க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்'( Star’s Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதன் அறிமுகவிழா சென்னை போரம் விஜயா மாலில் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடல். பாடலுடன் தொடங்கிய விழாவில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப் படுத்தப் பட்டன. ‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்’ அணியை ஸ்ரீகாந்த்தும், ‘சென்னை ஸ்மாஷர்ஸ்’ அணியை பரத்தும், முன்றாவது அணியான ‘சென்னை ராக்கெட்ஸ்’ அணியை ஷாமும் கைப்பற்றி உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டிஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அமைப்பாளர் கணேஷால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அனுராதா, பவர்ஸ்டார் உட்பட பல சின்னத்திரை, பெரியதிரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரியில் சென்னை போரம் விஜயா மாலில் நடைபெறவுள்ளது.