ரஜினி, அமிதாப்பை இயக்கிவரின் டைரக்சனில் ஸ்ரீகாந்த்..!

முப்பது வருடங்களுக்கு முன்பே பாலிவுட்டில் அமிதாப், ரஜினி ஆகியவர்களை வைத்து படங்களை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனர் தான் கே.சி.பொகாடியா.. இவர் இயக்குனராக அறிமுகமானது 1987ல் தான் என்றாலும் அதற்கு முன்பிருந்தே பட தயாரிப்பிலும் கால் பதித்தவர் தான்.. அந்தவகையில் 1985ல் இவர் தயாரித்த படம் தான் ‘தேரி மேஹர்பனியன்’..

அம்ரீஷ் புரி, ஜாக்கி சேராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படத்தின் கதாநாயகன் என்றால் அதில் ‘மோதி’ என்கிற கேரக்டரில் நடித்திருந்த பிரவ்னி என்கிற நாய் தான். விஷயம் என்னவென்றால் தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிப்படமாக இயக்குகிறார் இயக்குனர் கே.சி.பொகாடியா..

இந்தப்படத்தின் நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதற்காக லண்டனில் இருந்து இரண்டு ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளனவாம்.

KCPokadiyaNikisha PatelSrikanthஅமிதாப்அம்ரீஷ் புரிகே.சி.பொகாடியாஜாக்கி சேராப்தேரி மேஹர்பனியன்நிகிஷா படேல்ரஜினி