பாண்டிராஜூக்கு ஆசுவாசம் தந்த தேனாண்டாள் பிலிம்ஸ்..!


வாங்கிய கடனை திருப்பி கேட்டால், சிம்புவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படம் ரிலீஸாகட்டும்.. அன்னைக்கே திருப்பி தருகிறேன் என பலர் கிண்டலாக சொல்லும் அளவுக்கு கடந்த ஜனவரி மாதமே தயாரான அந்தப்படம் ரிலீசுக்கான தேதி தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றது.

ஆனால் தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.. அதனால் இனி படம் வெளிவருவதில் உள்ள சிக்கல்கள் உடனடியாக களையப்பட்டு வரும் பிப்ரவரி இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஆக டிசம்பரில் ‘பசங்க-2’, ஜனவரியில் ‘கதகளி’ அடுத்து பிப்ரவரியில் ‘இது நம்ம ஆளு’ என மாதத்துக்கு ஒரு படம் தந்து இதுவரை யாரும் செய்யாத ஹாட்ரிக் சாதனை படைக்கப்போகிறார் பாண்டிராஜ்.. இந்தப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் எடுக்கவேண்டும் என சிம்பு தரப்பில் சொல்லப்பட்டு வந்த நிலையில், நயன்தாரா மீண்டும் கால்ஷீட் கொடுக்காத நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது பண்டிராஜுக்கு மிகுந்த ஆசுவாசத்தை தந்துள்ளது.

Ithu Namma AaluKathakaliNayantharaPandirajPasanga-2SimbuSri Thenandal Films