ஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..!

லேட்டஸ்ட் தொழில்நுட்ப கருவிகளும் வேண்டும்.. அதேசமயம் படஹ்தின் புரடக்சன் செலவும் குறைவாக இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனம். நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.. இந்த ஸ்டுடியோவை இயக்குனர் இமயம் பாரதிராஜா திறந்து வைத்துள்ளார்.

படம் தயாரித்தலின் மூன்று நிலைகளான ப்ரீ புரடக்சன், புரடக்சன், போஸ்ட் புரடக்சன் என்கிற பணிகளிலும் ஸ்ரீ ஸ்டுடியோ உதவிகரமாக இருக்கிறது. அதனால் தற்போது ஒரு திரைப்படம் எடுக்க தயாராகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமாம் சிறிய பட்ஜெட் படங்களாக உருவான கோலிசோடா, மூடர்கூடம் படங்களாகட்டும் தற்போது தயாராகி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.O, காலா ஆகிய படங்களாகட்டும் ஸ்ரீ ஸ்டுடியோவின் லேட்டஸ்ட் டெக்னாலஜி இடம் பெற்றுள்ளது.

BharathirajaSree Studioபாரதிராஜாஸ்ரீ ஸ்டுடியோ