மலையாளத்தில் காலடி வைக்கிறார் சௌந்தரராஜா..!


‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாரின் நண்பனாகவே வந்து திடீரென துரோகியாக மாறும் பரஞ்சோதியாக எல்லார் மனதிலும் ஆழப்பதிந்துவிட்டவர் சௌந்தரராஜா. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் கடந்தவருடம் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகிறது.

சினிமாவின் மீது அவருக்கு இருந்த தாகம்தான். இரண்டு லட்ச ரூபாய் சம்பளம், வெளிநாட்டில் பார்த்துக் கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலை ஆகியவற்றை உதறிவிட்டு நடிக்க அழைத்து வந்தது. அந்தவகையில் சினிமாவில் தான் எதிர்பார்த்த இடத்தை நோக்கி, சரியான திசையில் தான் முன்னேறிக்கொண்டு இருக்கிறார் சௌந்தரராஜா..

அதன் விளைவாக தமிழில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ராமகிருஷ்ணனுடன் இணைந்து நடிக்கும் “ஒரு கனவு போல” படம், மற்றும் சௌந்தரராஜா தனி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது இத்துடன் புத்தாண்டு பரிசாக மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் சௌந்தரராஜாவை தேடிவந்துள்ளதால் சந்தோசத்தில் இருக்கிறார்.

 

ஒரு கனவு போலசசிகுமார்சுந்தரபாண்டியன்சௌந்தரராஜாஜிகர்தண்டாராமகிருஷ்ணன்வருத்தப்படாத வாலிபர் சங்கம்