ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான செண்டிமெண்ட்.. அப்படித்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மே-1ஆம் தேதி செண்டிமெண்ட். காரணம் அன்னைக்குத்தான் அவர் முதன்முதலா டைரக்ட் பண்ணின ‘வாலி’ படம் ரிலீஸாச்சு. அன்னைக்கு அஜித்தோட பிறந்தநாள் வேற.. அதனால நீண்ட இடைவெளிக்கு அப்புறமா தான் இயக்கி, நடிச்சுட்டு வர்ற ‘இசை’ படத்தையும் வர்ற மே-1ஆம் தேதி ரிலீஸ் பண்ண முடிவு செஞ்சிருக்காரு எஸ்.ஜே.சூர்யா.
இந்தப்படத்துக்கு இசையமைக்கிறதும் அவர் தான். இந்த படம் இரண்டு இசையமைப்பாளர்களை சுத்தி நடக்குற, அவர்களிடையே ஏற்படுற ஈகோ மோதலை பத்திய கதைன்னும் படத்தை பத்தி ஒரு சலசலப்பு இருந்துட்டு வருது. இந்தப்படத்துல எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியா சாவித்ரிங்கிற புதுமுகம் நடிக்கிறாங்க.