சி.ஐ.டி ஆபீசர் வேடத்தில் லாரன்ஸ் கலக்கும் சிவலிங்கா..!

Si

கடந்த மாதம் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் தான் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்தார் ராகவா லாரன்ஸ்.. அடுத்தபடமான சிவலிங்கா’வில் ஒரு படி மேலாக சி.ஐ.டி ஆபிசராக புரமோஷன் ஆகியுள்ளார் லாரன்ஸ்.. இந்தப்படம் நாளை மறுநாள் (ஏப்-14) ரிலீஸாகிறது.. ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அவரது மகன் சக்திவேல் வாசு, கதைக்கு திருப்புமுனையாக அமையும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. இவருடன் கூடவே புறா ஒன்றும் நடித்துள்ளது. அதாவது புறா ஒன்று கொலை சம்பவத்துக்கு சாட்சி சொல்லும் வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது..

சந்திரமுகியில் ஏற்கனவே நம்மை உலுக்கி எடுத்த இயக்குனர் பி.வாசு, இந்தப்படத்தை பக்கா ஹாரர் த்ரில்லராக உருவாக்கியுள்ளார்.. ஆக மொத்தத்தில் இந்த ‘சிவலிங்கா’, தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களை மிரள வைக்கப்போவது உறுதி..!

LawrenceP VasuRitika SinghSakthi P VasuSivalingaசிவலிங்காலாரன்ஸ்