சக்திவாசுவுக்கு முதல் 100 நாள் படமாக அமைந்த ‘சிவலிங்கா’..!


இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவாசு அவ்வபோது சில படங்களில் நடித்துவந்தாலும் கூட இன்னும் அவருக்கென ஒரு ஸ்திரமான வெற்றிப்படம் இங்கே தமிழில் அமையவில்லை.. ஆனாலும் அவரை சோர்வடைய செய்யாமல் அவருக்கான ஊக்கப்பரிசாக அமைந்திருக்கிறது சிவலிங்காவின் வெற்றி.

ஆம் கடந்த பிப்ரவரியில் கன்னடத்தில் சிவராஜ்குமார் இயக்கத்தில் வெளியான ‘சிவலிங்கா’ படம் பல தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. பி.வாசு இயக்கிய இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் சக்திவாசு. தற்போது தான் நடித்த படம் 100 நாளை தாண்டி ஓடுவதில் சந்தோஷமாக இருக்கிறார் சக்திவாசு.

சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும் ரசிப்பத்ற்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமான முறையில் எடுக்கவுள்ளனர். சிவலிங்காவின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும் சக்திவாசுவும் நடிக்கின்றார், மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது 7 நாட்கள், துரியோதனா என 2 தமிழ் படங்களிலும் பெயரிடப்படாத மலையாளப் படத்திலும் நடிக்கின்றார் சக்தி வாசு.

sakthivasuSivalingaசக்திவாசுசிவராஜ்குமார்சிவலிங்கா