தமிழ் புத்தாண்டில் மும்முனை போட்டி உறுதி..!


பொங்கல் கடந்துவிட்டால் அதற்கடுத்ததாக சினிமாக்காரர்களின் இலக்கு தமிழ்ப்புத்தாண்டு தான்.. விசேஷ நாள் என்பது மட்டுமல்லாமல் கோடை விடுமுறையும் சேர்ந்துகொள்வதால் இந்த சீசனில் படத்தை வெளியிட்டால் நல்ல மகசூலை அள்ளலாம் என்பதும் கூட இந்த தினத்தில் படத்தை வெளியிட பலரும் போட்டிபோட காரணம்.

அந்தவகையில் தற்போதைய நிலவரப்படி இந்த வருடம் தமிழ் புத்தாண்டு (ஏப்-14) அன்று தனுஷ் முதன்முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’, மஞ்சப்பை ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘கடம்பன்’ மற்றும் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா என மூன்று படங்கள் வெளியாகின்றன. இந்த மூன்று படங்களுக்கும் ரிலீஸ் தேதி போஸ்டர்களை வெளியிட்டு இதை உறுதியும் செய்துவிட்டார்கள்.

KadambanLawrencePowerpandiSivalingaகடம்பன்சிவலிங்காபவர் பாண்டி