சமீபத்தில் நடிகர் சிவகுமார் ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் சுருக்கமாக உரை நிகழ்த்தினார். அதுமட்டுமல்ல இதற்கு முன்னர் ராமாயணத்தையும் இதேபோல இரண்டேகால் மணி நேரத்தில் அனைவருக்கும் புரியும் அழகு தமிழில் கூறிய சாதனையும் சிவகுமாருக்கே சொந்தமானது..
“ராமாயணத்தை விட அமைப்பில் 4 மடங்கு பெரியதான, உலக இலக்கியங்களில் பெரியது என்று சொல்லப்படும் மகாபாரதத்தின் மொத்தக் கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக ஒரே மூச்சில் 2.10 மணி (13௦ நிமிடங்கள்) நேரத்திற்குள் ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பதும் நான் எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது” என்கிறார் சிவகுமார்.