ஷாக் மேல் ஷாக் கொடுப்பதில் இயக்குனர் மோகன்ராஜா முன்னணி வகிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. ரீமேக் படங்களாக இயக்கிவந்தவர் ‘தனி ஒருவன்’ வெற்றி மூலம் தனிப்பாதை கண்டார்.. அந்த வெற்றியால் அடுத்து முன்னணி நடிகர்களை, அட்லீஸ்ட் தனுஷ், விஷால் என இரண்டம் கட்ட முன்னணி நடிகர்களைத்தான் அடுத்த படத்தில் இயக்குவர் என நினைத்தால் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்வு செய்து ஷாக் கொடுத்தார்..
இன்னும் பத்து படங்களைகூட தொடாத, வளர்ந்து வரும் நாயகனான சிவகார்த்திகேயனுக்கு இந்தப்படத்தில் ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம் இப்போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சிவகார்த்திகேயனுக்கே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மோகன்ராஜா. தனி ஒருவன் தந்த மரியாதை தான் நயன்தாராவை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க சம்மதிக்க வைத்துள்ளது என்றே சொல்லப்படுகிறது.