நடிகர் திலகம் மறைந்தபின்னர் அவர் நினைவாக மணிமண்டபம் கட்டவேண்டும் என திரையுலகினரும் அவரது ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர்.. அப்போது முதல்வராக இருந்த ஜெயலாலிதா அதை ஏற்று அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகில் மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கினார்.
ஆனால் ஏனோ இத்தனை ஆண்டு காலம் திரையுலகத்தினரால் மணிமண்டபம் கட்டும் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை. ஆனால் இப்போது நடிகர் திலகம் சிவாஜிக்கு அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே அரசு செலவிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு இளையதிலகம் பிரபு மற்றும் கமல் ஆகியோர் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.