கணவர் தயாரிப்பில் நடிக்கும் சிம்ரன்..!


சிம்ரன்.. அழகு, நடிப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்றவர். இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்துவிட்டுத்தான் தமிழுக்கு வந்தார். தமிழ்சினிமாவும் இவரை முன்னணி நடிகையாக்கி அழகு பார்த்தது. முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் சிம்ரன்.

தற்போது சினிமாவில் தனக்கான நல்ல கேரக்டர்கள் தேடிவரும்போது மட்டும் நடிக்க சம்மதம் சொல்லி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் படம் தயாரிக்கும் விதமாக ‘சிம்ரன் & சன்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கி, முதல்படத்தின் தயாரிப்பு வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை கொண்டு எண்ணற்ற விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட கௌரிசங்கர் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார் முக்கிய அம்சமாக இந்த புதிய படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்..

Deepak BaagaGowri ShankarSimranSimran & Sons