சமீபத்தில் வெளியான ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தில் காதலுக்கு உதவும் ஜாலியான ரோல் ஒன்றில் நடித்த சிம்ரன் ரசிகர்களை சர்ப்ரைஸ் சந்தோஷத்தில் ஆழ்த்தினார். அந்தப்படம் நன்றாக ஓடுவதால் சிம்ரன் தனது அடுத்த படத்தை உடனே துவக்க ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். இந்தப்படத்தை தயாரிக்க இருப்பது அவரது கணவர் தீபக் தானாம். இந்தப்படத்தில் சிம்ரன் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.
சில வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியான ‘மர்தானி’ படத்தில் ராணி முகர்ஜி ஏற்று நடித்திருந்த போல்டான போலீஸ் அதிகாரி போல, இதில் சிம்ரன் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். விளம்பரப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற கௌரி சங்கர் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். முன்னணி ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ள இந்தப்படம் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளதாம்.