எங்கே தொலைத்தோமோ அங்கே தேடினால் தான் கிடைக்கும் எநெஉ சொல்லப்படுவதுண்டு. இந்த பழமொழிக்கு ஏற்பத்தான் சிம்புவின் மூவும் அமைந்திருக்கிறது.. மழை வெல்ல நேரத்தில் ஒரு ‘பீப் சாங்’கை வெளியிட்டு பெருவாரியான மக்களிடம் அர்ச்சனையை வாங்கி கட்டிக்கொண்ட சிம்பு, இப்போது இன்னொரு சாங்கை வெளியிட்டு அந்த களங்கத்தை துடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்..
இது ‘வோட் சாங்’.. அதாவது ஓட்டுப்பாடல்.. வரும் 16ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை செலுத்தி தங்களது அடிப்படை உரிமையை நிலை நாட்டவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி தனது தந்தை பாணியில் எதுகை மோனையில் ‘போடு மாமா ஓட்டு’ என பாடியுள்ளார்..
பொதுநலனுக்காகவும் மக்களின் கடமையை வலியுறுத்தியும் தேர்தல் நெருக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த பாடல் அவர் மீதான முந்தைய ‘பீப்’ இமேஜை மாற்றுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.