சின்னத்தம்பி பிரபு இசையமைப்பாளராக ஆகிவிட்டாரா என ஆச்சர்யப்படவோ பதறவோ வேண்டாம்.. இது சிம்புவின் அன்புத்தம்பியான குறளரசன் பற்றிய விஷயம் தான். சிம்பு நடித்துவரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் தானே..
அதனால் தனது முதல் படத்திலேயே இசையில் சில புதுமைகளை செய்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தில் தற்போது ஸ்ருதிஹாசனை அழைத்து ஒரு பாடலை பாடவைத்துளார். அத்துடன் தானும் ஸ்ருதியுடன் சேர்ந்து பாடியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் சந்தானமும் சூரியும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.