முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்ததும் தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘கான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது… ஆனால் இந்த நிலையில் திடீரென படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது சிம்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் “கான் படம் என் மனதுக்கு நெருக்கமான கதையம்சம் கொண்ட படம். லட்சியம் சார்ந்த படம் மற்றும் படக்குழுவும் அமைந்தது. படக்குழுவும், நானும் இணைந்து ஒருமனதாக படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த வருடம் மீண்டும் துவக்கலாம் என இருக்கிறோம்” என இது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.