ஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்று சங்கிலி முருகன் காமெடி பண்ணுவது போல, என்றைக்கு நடிகர்சங்க தேர்தலில் சரத்குமாருக்கு எதிராக போட்டி அணி உருவானதோ அன்றிலிருந்தே அந்த அணிக்கும் குறிப்பாக அந்த அணியின் பொதுச்செயலாளர் விஷாலுக்கும் சிம்புவுக்கும் ஏழாம் பொருத்தம் தான்..
புதிய அணி பொறுப்பேற்ற பின், சங்க நடவடிக்கைகள் பற்றி எதுவும் வாய்திறக்காமல் இருந்த சிம்பு, சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டிலும் கூட கலந்துகொள்ளவில்லை. ஆனால் இப்போது தடாலடியாக, தான் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சங்கம் என்பது ஒரு நடிகன் கஷ்டத்தில் இருக்கும்போது அவனுடன் இருந்து அவனுக்கு தோள்கொடுத்து உதவவேண்டும்.. ஆனால் இப்போதைய நடிகர்சங்கம் நான் பிரச்சனைகளில் சிக்கி தவித்தபோது உதவிக்கரம் நீட்டவில்லை.. அதனால் சங்கத்தில் இருந்து விலகுகிறேன் என காரணம் கூறியுள்ளாராம் சிம்பு.