ஆக்க்ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் கதகளி ஆடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் குச்சுப்புடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைவது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான். இந்தப்படத்தில் சிம்புவின் நண்பனாக சந்தானத்துடன் சேர்ந்து சூரியும் நடிக்கிறார்.
இன்னொரு முக்கியமான விஷயம் இந்தப்படத்தை சிம்புவே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறாராம். அதைவிட முக்கியமான விஷயம் இந்தப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறாராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.