செப்-15ல் சிம்பு-நயன்தாரா படம் ரிலீஸ்..!

சிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் தான் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் வரும் செப்-15ல் ரிலீஸாக இருக்கிறது.

அதற்காக தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என நினைத்துவிடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது.. இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளன..

அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார். ‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம். இந்தப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இந்தப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்.

இது நம்ம ஆளுகுறளரசன்சத்யம் ராஜேஷ்சரஸுடுசிம்புசூரிடி.ராஜேந்தர்நயன்தாராநேனு சரஸுடுமுன்ன மன்மதா.. நின்ன வல்லபா