கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை பற்றிய தேவைக்கும் அதிகமான செய்திகள் வெளிவந்துவிட்டன.. அதனாலேயோ என்னவோ, தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை எந்தவித முன்னறிவிப்புமின்றி பரபரப்பை கிளப்பாமல் வெளியிட்டிருக்கிறார்கள்..
ஆனால் பரபரப்பில்லாமல் வெளியிடப்பட்டதாலோ என்னவோ, ட்ரெய்லரை பார்க்கும்போது செமத்தியான ஆக்சன் பேக்கேஜ் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.. மஞ்சிமாவும் சிம்புவும் மேட் பார் ஈச் அதர் என்பது போலவும் இந்தப்படம் வெளியானால் கீர்த்தி சுரேஷுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு மஞ்சிமா உருவெடுப்பார் என்பதும் நன்றாகவே தெரிகிறது.