நேற்று கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வில் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பரிசளிக்கும் விதமாக ஒவ்வொரு செயல்களை செய்தனர். சூர்யா நேற்று டிவிட்டரில் அடியெடுத்து வைத்ததுடன், தனது மனைவி ஜோதிகா நடித்துள்ள படத்தின் பெயரையும் (36 வயதினிலே) அறிவித்தார்.
அதேபோல நடிகர் சிம்பு தான் நடித்து வரும் மார்ச்-27ல் வெளியாகவிருக்கும் தனது ‘வாலு’ படத்தை தனது தாய்க்காக சிறப்புக்காட்சியாக திரையிட்டு காண்பித்துள்ளார். படம் பார்த்த சிம்புவின் தாய், படம் முடிந்ததும் சிம்புவை கட்டியணைத்து தன் பாசத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார். ‘வாலு’ ரிலீஸான கையோடு சிம்பு-செல்வராகவன் கூட்டணி தங்களது படத்தை ஏப்ரலில் துவங்க இருக்கின்றனர்.