சிம்புவின் புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இது நம்ம ஆளு பிரச்சனைகளை எல்லாம் அவரது அப்பா டி.ராஜேந்தர் பார்த்துக்கொள்ள, அதிலிருந்து ரிலாக்ஸான சிம்பு, கௌதம் மேனன் டைரக்சனில் ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் செல்வராகவன் டைரக்சனில் ‘கான்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த இரண்டு படங்களுக்கும் மாரத்தான் ரேஸ் போல, இடைவிடாத ஓட்டம் ஓடி நடித்துக்கொடுத்த சிம்பு இப்போது ஜஸ்ட் ரிலாக்ஸாக பிரேக் எடுத்துக்கொண்டுள்ளார். இந்த இடைவெளியில் மங்களூர் அருகில் உள்ள மருதேஸ்வரர் கோவிலுக்கு சென்ற சிம்பு ஈஸ்வரனையும் வழிபட்டு வந்துள்ளார்.