கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருந்து அதன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட பல்லவி சுபாஷ் விலகினார் அல்லவா..? இப்போது அவருக்கு பதிலாக கேரளாவில் இருந்து மஞ்சிமா மோகன் என்கிற இளம் ஹீரோயினை கதாநாயகியாக அழைத்து வந்துள்ளார் கௌதம் மேனன்.
பேபி ஷாலினி, காவ்யா மாதவன், நஸ்ரியா இவர்கள் வரிசையில் மஞ்சிமாவும் சிறுவயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமாவுக்கு அவரது நடிப்பிற்காக பாரட்டுக்கள் குவிந்தன. நிக்கி கல்ராணி, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து மலையாளத்தில் இருந்து வரும் மஞ்சிமாவும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.