1965ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி கடந்த மார்ச்-14 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தனர். சென்னையில் ஆல்பர்ட் தியேட்டரில் திரையிடப்பட்ட இந்தப்படம் வெற்றிகரமாக 150வது நாளை தொட்டுள்ளது. செப்-1ஆம் தேதி இதன் வெள்ளிவிழாவை கொண்டாட்டத்தை காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.
பி.ஆர்.பந்துலு இயக்கிய இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக புரட்சித்தலைவி ஜெயலலிதா நடித்திருந்தார். மற்றும் நம்பியார், நாகேஷ், மனோகர் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்கள்.