தொடர்ந்து சீரான இடைவெளியில் தனது படங்களை திரைக்கு கொண்டுவந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சிபிராஜ். இவர் கதாநாயகனாக நடித்துள்ள கட்டப்பாவ காணோம்’ படம் வரும் மார்ச்-17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை வாஸ்து மீன் ஒன்றை மையப்படுத்தி இயகியுள்ளார் அறிமுக இயக்குனர் மணி செய்யோன்..
இநிலையில் சிபிராஜின் அடுத்த பட அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.. ஆம்.. சிபிராஜ் – ‘கிடாரி’ நாயகி நிகிலா விமல் இணைந்து நடிக்க இருக்கும் இந்த புதிய படத்தை இயக்குநர் வி.இசட்.துரையிடம் இணை இயக்குநராகவும், விளம்பர பட இயக்குநராகவும் பணியாற்றிய வினோத் என்பவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் அனிமேஷன் கலைஞர்களாக நானும், சிபிராஜும் நடிக்க இருக்கிறார்கள். சமூதாய பிரச்சனையை மையமாக கொண்டு அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை ‘பாஸ் மூவீஸ்’ சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரிலும், அதனை தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த இருக்கிறார்கள்.