வெள்ள நிவாரண நிதி அளித்தனர் சிபிராஜ்-விக்ரம் பிரபு


தமிழகத்தில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, நம் நடிகர்கள் தங்களால் இயன்ற நிவாரண நிதியை நடிகர்சங்க தலைவர் நாசரிடம் வழங்கி வருகின்றனர். சூர்யா தங்களது குடும்பம் சார்பாக ரூ.25 லட்சம் கொடுத்து இதை ஆரம்பித்துவைக்க, விஷால், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து இப்போது மற்ற நடிகர்களும் நிதியளித்து வருகிறார்கள்..

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் இருவரும் தங்கள் சார்பில் 2..25 லட்சமும் பிரபுவும் அவரது மகன் விக்ரம் பிரபுவும் இணைந்து தங்களது சார்பாக 5 லட்சமும் வழங்கியுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது பங்கிற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.. இன்னும் பலரும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக வசூலிக்கப்பட்டு முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

DhanushFlood Relief FundNasarPonvannanSibi RajVikram PrabhuVishal