சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் இருந்து எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு மலையாள ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது… மலையாள ரசிகர்களை தங்களது ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்களால் இந்த கூட்டணி வசியம் பண்ணிவிட்டது என்று கூட சொல்லலாம்.
‘சி-3’ படத்திற்கு எந்த அளவுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது என்பதை, கேரளா தியேட்டர்களில் இந்தப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்து வரும் விசிலும் கைதட்டலும் சொல்லாமல் சொல்கிறது.. அடுத்தடுத்து ரிலீசாகும் மலையாள படங்களின் ட்ரெய்லர்கள் இடைவேளையில் திரையிடப்படும்போது அதை சாதாரணமாக கடந்துபோகும் ரசிகர்கள், ‘சி-3’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டதும் மிகுந்த ஆரவாரத்துடன் அதை எதிர்கொள்கிறார்கள்..
வரும் பிப்-9ஆம் தேதி வெளியாக இருக்கும் சி-3’ மலையாள தியேட்டர்களில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.