‘சி-3’ படத்தை இணையத்தில் வெளியிட்டால்..? ; நீதிமன்றம் எச்சரிக்கை..!

அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சூர்யா-ஹரி கூட்டணியில், சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ள ‘சி-3’ படம் நாளை வெளியாகிறது. பொதுவாக ஒரு படம் ரிலீசான அன்றே அதனை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.. ஆனால் ‘சி-3’ படத்தை இணையதள மோசடி பேர்வழிகள் ரிலீசான அன்றே இணையதளத்தில் வெளியிடுவதாக சவால் விட்டிருந்தார்கள்..

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் மனு தாக்கல் அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம் ‘சி-3’ திரைப்படத்தை எந்த ஒரு இணையதளத்திலும், தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் யாரும் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் இந்தப்படத்தை திருட்டுத்தனமாக யாரும் இணையத்தில் பதிவேற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றே தெரிகிறது.

HariSi 3Suriyaஅனுஷ்காஆந்திராகனல் கண்ணன்சக்திவேலன்சி 3சூரிசூர்யாஜல்லிக்கட்டுதுரை சிங்கம்ஸ்டுடீயோ கிரீன்ஸ்ருதிஹாசன்ஹரிஹாரிஸ் ஜெயராஜ்